3 டன் கரும்பில் சிவலிங்கம்: பக்தர்கள் பிரமிப்பு!
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_39908_113607150.jpg3 டன் கரும்பில் சிவலிங்கம்: பக்தர்கள் பிரமிப்பு!நகரி: நகரி, கீழப்பட்டு கிராமத்தில், சிவராத்திரியை முன்னிட்டு, 3 டன் கரும்புகளால் பிரமாண்ட சிவலிங்கம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நகரி, கீழப்பட்டு கிராமத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு நேற்று 3 டன் கரும்பால், 16 அடி உயரமுள்ள சிவலிங்கம் உருவாக்கப்பட்டது.பின், அதற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இன்று சிறப்பு பூஜைகள், அன்னதானம் மற்றும் உற்சவம் ஆகியவை நடக்க உள்ளன. அதேபோல், நகரி கரகண்டேஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று மூன்று கால பூஜைகளுடன் சிவராத்திரி விழா துவங்கியது. புத்துார் – ரேணிகுண்டா இடையில் உள்ள சதாசிவகோனை, நாராயணவனம், கோனை, பிச்சாட்டூர் அடுத்த ராமகிரி பகுதியில் உள்ள வாலீஸ்வரர் கோவில், உள்ளிட்ட சித்துார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூ ஜைகள், இன்னிசை கச்சேரி, பஜனை, கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.