புதுப்பாளையத்தில் ராதா திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3928 days ago
கடலூர்: கடலூர், புதுப்பாளையத்தில் ராதா கல்யாண உற்சவம் நடந்தது. கடலூர், புதுப்பாளையம் குமரன் மகாலில் பக்த பஜனை மண்டலி சார்பில் 29ம் ஆண்டு ராதா கல்யாண மகோற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி பூஜை, கணேஷ் பாகவதர் குழுவினரால் அஷ்டபதி பஜனை, மாலை ஜானவாசம், நிச்சயதார்த்தம், திவ்யநாம பஜனை நடந்தது. நேற்று காலை உஞ்சவிருத்தி, திவ்யநாமம், ராதா கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.