மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாயனக் கொள்ளை விழா!
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாளை மயானக்கொள்ளை நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அ ங்காளம்மன் கோவிலில் மாசி திருத்தேர் பெருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கோபால விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. இரவு 8 மணிக்கு கொடியேற்றுகின்றனர். நாளை (18ம் தேதி) காலை 9 மணிக்கு முக்கிய விழாக்களில் ஒன்றான மயானக்கொள்ளை நடக்கிறது. 21ம் தேதி மாலை 4 .30 மணிக்கு தீமிதி விழாவும், 23ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. 26ம் தேதி தீர்த்தவாரி மண்டகப்படியும், 1ம் தேதி காப்பு களைதலுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழுதலைவர் வடிவேல், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, சரவணன், சேகர், மேலாளர் முனியப்பன், மணி மற்றும் கோவில் ஊழிய ர்கள் செய்து வருகின்றனர்.
தேர்கட்டும் பணி: மேல்மலையனுார் கோவில் ஐதீகத்தின்படி தேர் சக்கரம், அம்மன் பீடம் , கலசம் நிலையானவையாக உள்ளன. தேரின் மற்ற பாக ங்களை ஒவ்வொரு ஆண்டும் பச்சை மரங்களை கொண்டு செய்கின்றனர். இந்த ஆண்டு தேர்கட்டும் பணியை பச்சை பனைமரங்களை கொண்டு கட்டும் பணியில் தச்சு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.