கோவை மாகாளியம்மன் கோவிலில் 101வது பிரம்மோற்சவ விழா
ADDED :15 hours ago
கோவை : என். எஹச் .ரோடு - டவுன்ஹால் ரோடு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் 101வது பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நிறைவு நாளான நேற்று இரவு 7 மணியளவில் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் அருள் தரும் அம்மனாகவும், மாகாளியம்மன் ஆகவும் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.