இளையாத்தக்குடி அங்காளம்மன் கோவில் சிவராத்திரி விழா தொடங்கியது
ADDED :3926 days ago
இளையாத்தக்குடி : சிவகங்கை மாவட்டம் இளையாத்தக்குடி அங்காளம்மன் மலையாள கருப்பையா கோவில் மகா சிவராத்திரி விழா பிப்.,20ல் நிறைவு பெறுகிறது. கடந்த 15ம் தேதி காலை ருத்ராபி ஷேகமும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. நள்ளிரவில் மலையாள கருப்பையா கப்பரை எடுத்து வீதி உலா வந்தார்.இந்த கோவில் நகரத்தார்கள் ஒரு பிரிவினரின் குலதெய்வ கோவிலாகும். விழா நாட்களில் அபிஷேக, ஆராதனை நடக்கும். நிறைவு நாளான 20ம் தேதி விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பொங்கல் நடக்கும். அன்று இரவு நகர விருந்து நடக்கும். ஏற்பாடுகளை ஆ.ஏ.லெ. பாட்டையா பூசாரி, மு.கணபதி பண்டாரம், ஏ.நாராயண போஸ், சரவணன் பண்டாரம் செய்துள்ளனர்.