திண்டுக்கல் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்!
ADDED :3923 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காலை 9 மணிக்கு அம்மனுக்கு திருமாங்கல்யம், மஞ்சள் புடவை சாத்துப்படி செய்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10:30 மணிக்கு பாலகொம்பு ஊன்றுதலும், பகல் 12 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிப்., 27 பகல் 2:30 மணிக்கு பூக்குழி, இரவு 8 மணிக்கு தேரோட்ட விழா, பிப்., 28 இரவு 10 மணிக்கு தசாவதாரம், மார்ச் 1 காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச்., 2 இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், மார்ச்., 3 மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.