உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி விழா கோயில்களில் பூஜை; பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

மகா சிவராத்திரி விழா கோயில்களில் பூஜை; பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தேனி : மாசி மகாசிவராத்தியை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தேனியில் வீரப்பஅய்யனார் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கணேசகந்தபெருமாள் கோயில், தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. மகாசிவராத்திரி விரதம் முடித்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

தவிர ஆண்டிபட்டி, குருவியம்மாள்புரம், வேலப்பர்கோயில், வெங்கடாச்சலபுரம், கோவிந்த நகரம், அம்பாசமுத்திரம், சீப்பாலக்கோட்டை, சீலையம்பட்டி உட்பட பல்வேறு கோயில்களில் உள்ள குலதெய்வங் களுக்கு பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தேவாரம், உத்தமபாளையம், கம்பம், தேனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தென்மாவட்டங்களில் உள்ள தங்கள் குலதெய்வம் கோயில் களுக்கு சென்று வழிபட்டனர்.உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் மகாசிவராத்திரி விழா பிப்., 10 முதல் துவங்கி நடந்து வருகிறது. 1008 அகல்விளக்கு பூஜை நடத்தப்பட்டது.

இதில் நவராத்திரி பெண்கள் குழுவினரும், பிறந்த வீட்டுபிள்ளைகளும் பங்கேற்றனர். தொடர்ந்து துலாபாரம், லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலதிரிபுரசுந்தரிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. திருவிளக்கு பூஜை, மாலை அம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 7 சிறு பெண் களுக்கு அன்னமிடல், அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம் நடை பெற்றது. இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. விழா விற்கான ஏற்பாடுகளை மூங்கில் அன்னை காமாட்சியம்மன் சேவா அறக்கட்டளை தலைவர் பொன் கனகராஜ், செயலாளர் முருகேசன், பொருளாளர் நாராயணசாமி, பட்டத்து பூஜாரி பெருமாள், பொன்நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

பெரியகுளம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், கைலாசநாதர் கோயில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பெரியகுளம் பகுதியில் ஏராளமானோர் குலதெய்வம் கோயில்களில் வழிபாடு நடத்தினர். "தாரை தப்பட்டை இகை பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் பயறு வகைகளான மொச்சை, தட்டை, சுண்டல், பட்டாணி, பாசிப்பயறு உள்ளிட்ட பயறுகளை அவித்து சிவனுக்கு படைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !