மாரியம்மன் கோவில் ஸ்வாமி வீதி உலா!
ADDED :3920 days ago
தம்மம்பட்டி :தம்மம்பட்டியில் நடந்த, மாரியம்மன் ஸ்வாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தம்மம்பட்டியில், சிவராத்திரியையொட்டி, கடைவீதி மாரியம்மன் ஸ்வாமி வீதி உலா கொண்டாடுவதை, ஆண்டுதோறும் பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று,
அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் ஸ்வாமி, கடைவீதியில் புறப்பட்டு, நடுவீதி உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டனர்.