உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீர் பந்தல்காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா!

தண்ணீர் பந்தல்காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா!

சேலம்: சேலம், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில், நேற்று 68ம் ஆண்டு மாசி திருவிழா துவங்கியது.ஒவ்வொரு ஆண்டும் நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். நேற்று இரவு 7 மணிக்கு கோவிலில் சக்தி அழைத்தலுடன் நிகழ்ச்சி துவங்கியது. இரவு 9 மணிக்கு, அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.பிப்., 22ம் தேதி அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடத்தப்படுகிறது. 24ம் தேதி தீர்த்தகுடம், பால்குடம் எடுத்தல் மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது.25ம் தேதி சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. 26ம் தேதி பூப்பல்லக்கில் சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி மஞ்சள் நீராடுதல், 28ம் தேதி கோவிலில்மறுபூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !