தீவினை அகல!
ADDED :3983 days ago
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்:
இந்த மந்திரத்தை ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து 12 முறை பிரதட்சணம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டு மந்திரத்தை உச்சாடனம் செய்ய தொடங்க வேண்டும். அன்றிலிருந்து தொடர்ந்து 108 நாட்கள் தினமும் 48 முறை வீட்டிலோ, லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னிதியிலோ ஜபம் செய்து வந்தால் எந்தவிதத் துன்பமும் அணுகவே அணுகாது. இதை அவசரமில்லாமல் நிதானமாகச் சொல்ல வேண்டும். எண்ணிக்கைக்கு துளசி மாலையைப் பயன்படுத்தலாம். அசைவ உணவுப் பழக்கம் தவிர்க்க வேண்டும். இந்த மந்திரத்தை, சாத்வீக வேளையான சூரிய உதயத்துக்கு முன்பாகச் சொல்லி வருதல் விசேஷமாகும்.