கருமாரியம்மன் புற்று கோயிலில் மாசி திருவிழா!
ADDED :3930 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ஸ்ரீதேவி கருமாரியம்மன் புற்று கோயிலில் மாசி திருவிழா நடந்தது. கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.சிறுமலையில் உள்ள அசலைக்கு சென்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. உற்சவ அம்மன் நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர் செலுத்தினர். பாண்டி என்பவர் 12 அடி நீளமுள்ள திரிசூலம் மற்றும் வேல் அலகு குத்தி வந்தார்.