திரவிய கலச அபிஷேகம்: குருவாயூர் கோயிலில் துவங்கியது
ADDED :5230 days ago
குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் உப தேவதைகளான கணபதி, அய்யப்பன், பகவதி ஆகியோருக்கு, திரவிய கலச அபிஷேகம் நேற்று துவங்கியது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் உள்ள உபதேவதைகளுக்கு திரவிய கலச அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், அபிஷேக நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது.நேற்று மாலை 6 மணிக்கு தீபாராதனை நடந்த பிறகு, குரு காணிக்கை நிகழ்ச்சி நடந்தது. நாளை (22ம் தேதி) காலை அய்யப்பனுக்கு 108 கலசங்களிலான நீர் அபிஷேகம் செய்விக்கப்படும். தொடர்ந்து, 24ம் தேதி கணபதிக்கும், 27ம் தேதி பகவதிக்கும் அபிஷேகம் செய்யப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.