வேட்பாளருக்கு வெற்றி தரும் கோயிலுக்கு மீண்டும் விழா!
ADDED :3877 days ago
பாலமேடு : பாலமேடு வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோயில் விழா 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடத்த கிராம கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா நடந்தது. தொடர்ந்து நடக்காததால் பல்வேறு பிரச்னை ஏற்பட்டதாக கிராமத்தினர் கருதினர். இதுதொடர்பான கூட்டத்தில், தொடர்ந்து விழா நடத்த வேண்டும். வழிமுறைகளை மாற்றக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இக்கோயிலில் முதலில் வணங்கும் வேட்பாளருக்கே வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை கட்சியினரிடையே உள்ளது.