பட்டவர்த்தியில் கும்பாபிஷேகம்
ADDED :3927 days ago
குளித்தலை: குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் சக்தி விநாயகர், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் சக்தி விநாயகர், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று காலை, 6.20 மணிக்கு கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரத்தின் கலசத்தில், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில், விழாக்குழுவினர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், விழாக்குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.