செய்தொழிலில் லாபம் பெற!
ADDED :3874 days ago
வ்யாதந்வாநா தருண துலஸீ
தாமபி: ஸ்வாமபிக்க்யாம்
மாதங்கா த்ரௌ மரகதருசிம்
புஷ்ணதீ மாநஸே ந:
போகைஸ்வர்ய ப்ரிய ஸஹசரை
காபி லக்ஷ்மி கடாக்ஷை
பூய: ஸ்யாமா புவந ஜநநீ
தேவதா ஸந்நிதத்தாம்.
-ஸ்ரீவரதராஜ பஞ்சாசத்
நீலத்திருமேனியான பேரருளாளன் பச்சை நிற துளசியில் மாலை தரித்திருக்கிறான். எம்பெருமானின் திருமேனியில் பிராட்டியின் நீள் விழிகள் படர்கின்றன. அந்தப் பார்வையால் அவனுடைய திருமேனியின் நீலநிறம் மேலும் பொலிவுடன் விளங்குகிறது. அது, அத்திரிகிரியெங்கும் பரவி, இது மரகத மணியோ! என எண்ண வைக்கிறது. அத்தகைய பேரருளாளன் நம் மனத்தில் எப்போதும் நிறைந்திருக்கட்டும். தினமும் 10 முறை இந்தத் துதியைச் சொல்லிவர தொழில் லாபம் பெருகும்.