உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா!

வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா!

வால்பாறை:  வால்பாறை வாழைத்தோட்டம் அன்னை காமாட்சி அம்மன் கோவிலின், 47 ம் ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியே ற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், காலை, 7:00  மணிக்கு அலங்காரபூஜையும் நடந்தன. காலை, 10.00 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின், முன்னாள் நகராட்சித்தலைவர் கணேசன்  முன்னிலையில், மருதமுத்து திருக்கொடி ஏற்றினார். விழாவில் வரும், 5ம் தேதி காலை, 9:15 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து ம ங்களாபரணம் கொண்டுவரப்பட்டு, காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து அன்னதானம் வழங்கும் விழாவும்  நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மருதமுத்து,கோவிந்தராஜ், சாக்குமணி உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !