பொன் மாரியம்மன் கோவில் திருவிழா!
ADDED :3874 days ago
தர்மபுரி: பாலக்கோடு, பனங்காடு, புதூர் பொன் மாரியம்மன் கோவில், 22ம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
பாலக்கோடு, பனங்காடு புதூர் பொன்மாரியம்மன் கோவில், 22ம் ஆண்டும் திருவிழா, கடந்த, 23ம் தேதி கொலு வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், இரவு, 7மணிக்கு அன்னதானமும் நடந்தது.நேற்று, அலகு குத்துதல், பால்குடம், தீச்சட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மேலும், இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக, அம்மன் வேடம் அணிந்தும், ஆகாய காவடி எடுத்தும், வாகனங்களை அலகு குத்தி இழுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.