உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2 கன்று ஈன்ற பசுமாடு பூஜை செய்து வழிபாடு

2 கன்று ஈன்ற பசுமாடு பூஜை செய்து வழிபாடு

ராசிபுரம்: ஓம்சக்தி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுமாடு ஒன்று, இரண்டு கன்றுக் குட்டிகளை ஈன்றது. வெள்ளிக்கிழமை ஈன்றதால், அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள், கோமாதா பூஜை செய்து வழிபாடு நடத்தினர். ராசிபுரம் அடுத்த மங்களபுரம், வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் சக்திமுருகன் (45). ஓம்சக்தி பக்தரான அவர், அங்குள்ள ஓம்சக்தி கோவிலுக்கு, பசு ஒன்றை தானமாக வழங்கினார். அந்த பசுவை கோயில் பக்தர்கள் பராமரிப்பு செய்து வந்தனர். இந்நிலையில், பசுமாடு நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு, ஆண், பெண் என இரண்டு கன்றுகளை ஈன்றது. வெள்ளிக்கிழமை கன்று ஈன்றதால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் பக்தர்கள், கோமாதா பூஜை செய்து பசுவை வழிபட்டனர். மேலும், இரு கன்றுகளை ஈன்ற பசுவை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !