பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4212 days ago
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருத்தேர் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பின்னர் பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து அலங்கரித்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.