உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ‘பேட்டரி’ கார் சேவை நிறுத்தம்!

திருத்தணி முருகன் கோவிலில் ‘பேட்டரி’ கார் சேவை நிறுத்தம்!

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், கடந்த  ஆறு மாதங்களாக பேட்டரி கார் இயக்கப்படாததால், வயதான பக்தர்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர்.   திருத்தணி, முருகன் மலைக்கோவிலில், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், எளிதில் சுவாமியை தரிசி க்க வசதியாக, 2013, பிப்.,யில், ஏழு லட்சம் ரூபாய் செலவில், கோவில் நிர்வாகம், பேட்டரி கார் வாங்கி, பயன்பாட்டிற்கு விட்டது.  இந்த நிலையில்,  கடந்த ஆறு மாதங்களாக, காரின் பேட்டரி பழுதடைந்ததால், சேவை நிறுத்தப்பட்டு, அந்த வாகனம் மலைக்கோவிலில், ஒரு மூலையில் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. பேட்டரி கார் சேவை இல்லாததால், வயதான பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, கோவில் இணை ஆணையர்  (பொறுப்பு) சிவாஜி கூறியதாவது:தற்போது, மூன்று புதிய பேட்டரிகள் வாங்க, கோவில் தக்காருக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்த வாரத்திற்குள்  புதிய  பேட்டரிகள் பொருத்தப்பட்டு, மீண்டும் சேவை துவங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !