உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயன பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை!

ஸ்தலசயன பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை!

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று லட்சார்ச்சனை நடந்தது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108  வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. தற்போது, உலக நன்மை, பகுதிவாசிகள் மேம்பாடு, பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர் ÷ தர்ச்சி ஆகிய வற்றுக்காக, கோவிலில் நேற்று லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை, வழக்கமான வழிபாட்டைத் தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள்,  நிலமங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோர், ராஜ அலங்காரத்தில், மகா மண்டபத்தில் எழுந்தருளினர். காலை, 8:30  மணிக்கு, லட்சார்ச்சனை துவங்கியது. மாலை வரை நீடித்த லட்சார்ச்சனையில், அர்ச்சகர்கள், வேத பாராயண மந்திரங்கள் ஓத, பக்தர்களும் பின்பற்றி  சங்கல்பம் செய்தனர். மாலையில், குலசேகர ஆழ்வார் சாற்றுமறை, ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபாராதனை ஆகியவற்றுடன், லட்சார்ச்சனை  நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !