உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 8ல் நலம்புரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

8ல் நலம்புரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

ஆர்.கே.பேட்டை: கொற்றலை ஆற்றங்கரையில் அமைந்துள்ள நலம்புரியம்மன் கோவிலில், வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  சொரக்காய்பேட்டை அடுத்த, கொற்றலை ஆற்றங்கரையில் உள்ளது நலம்புரியம்மன் கோவில். ஏகமூர்த்தி விஸ்வநாத மரபினரின் குலதெய்வமான  இந்த கோவிலில், ஆறு மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, கோவில் கோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து  வருகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை, வரும் வெள்ளிக்கிழமை காலை 5:00  மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது.  மறுநாள் பிரவேச பலி, அஷ்டபந்தனம் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை, காலை 9:00 மணிக்கு, நாடி சந் தானம், தத்துவார்ச்சனை.  அதை தொடர்ந்து, மகா பூர்ணாஹூதியும், 11:15 மணிக்கு,  மூலவர் மற்றும் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி,  கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !