உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முச்சந்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

முச்சந்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

திருவாரூர்: நீடாமங்கலம்  முச்சந்தி மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட முச்சந்தி மா ரியம்மன் கோயில் மகாகும் பாபிஷேகத்தை முன்னிட்டு  கடந்த  28ம் தேதி  காலை 7.00 மணிக்கு கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜையும், மாலை 4.00  மணிக்கு வாஸ்து சாந்தி,மிருத்சங்கிரஹனம் துவங்கியது. இரு தினங்கள் சிறப்பு பூஜைகள் நடந்தது.  நேற்று  2ம் தேதி காலை 7.00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும்,  பின்னர் சிறப்பு பூஜைகள், த்துவார்ச்சனை,காலை 9,00 மணிக்குமேல் மகா பூர்ணா ஹீதி தீபாரா தனை, விமானமகாகும்பா பிஷேகம், மூலவர்மகா கும்பா பிஷேகம், சூரியனார் கோவில் ஆதினம் சங்கரதேசிக பிரம்மச்சாரிய சுமிவாமி கள் தலைமையில்,திருப்பணிக்குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன், அறங்கா வல் குழுத் தலைவர் கல்யாணராமன் முன்னிலையில்,ஐயப்ப சிவாச் சாரி யர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங் கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்க ப்பட்டது.       


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !