உலகக் கோப்பைக்காக.. சிறப்பு பிரார்த்தனை!
ADDED :3888 days ago
கோவை: உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று, கோவையில், ஆறடி ஊதுபத்தியை பற்ற வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, தற்போது நடந்து வருகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா, மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று, ‘சைக்கிள் பியூர் அகர்பத்தி’ நிறுவனம் சார்பில், இந்தியா முழுவதும் சிறப்பு பிரார்த்தனை நடந்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கோவை ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில், ஆறடி ஊதுபத்தியை வடிவமைத்து பற்ற வைத்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.