கோயில் திருவிழாவில் ஒரு வழிப்பாதைக்கு எதிர்ப்பு!
ADDED :3929 days ago
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களின் ஒன்றான மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து ஏராளமான பெண்கள் இங்கு இருமடி கட்டு ஏந்தி வந்து தரிசனம் நடத்துவதால் இது பெண்களின் சபரிமலை என்று புகழப்படுகிறது.
இங்கு பாதுகாப்புக்காக இரண்டாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு கடலுக்கு செல்லவும் கோயிலில் தரிசனத்துக்கு செல்லவும் ஒரு வழிப்பாதை அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சிரமப்படுவதால் ஒரு வழிப்பாதையை கைவிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீஸ் தரப்பில் இதை ஏற்காததால் பக்தர்கள் அமைப்பு சார்பில் கலெக்டரிடம் முறையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.