பெருமுக்கல் மலையில் இன்று மாசிமக திருவிழா!
ADDED :3928 days ago
முருக்கேரி:முருக்கேரி அடுத்த பெருமுக்கல் மலை மீதுள்ள ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா இன்று நடக்கின்றது.விழாவை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்கு கீழ்சிவிரி, கீழ்அருங்குணம், நல்லாளம், பழமுக்கல் உள்பட ஏழு கிராமங்களில் இருந்து அம்மன் சிலைகளை பக்தர்கள் வீதியுலாவாக கொண்டு வருகின்றனர். பின்னர், பெருமுக்கல் மலை மீதுள்ள புனித குளக்கரையில் வைத்து வழிபாடு செய்கின்றனர். மூலவர் ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் நடக்கின்றது. பகல் 12: 00 மணிக்கு அன்னதானமும், மாலை 4:30 மணிக்கு அம்மன் தீர்த்தவாரியும் நடக்கிறது.