உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பேட்டை கடற்கரையில் சுவாமிகள் தீர்த்தவாரி!

புதுப்பேட்டை கடற்கரையில் சுவாமிகள் தீர்த்தவாரி!

பரங்கிப்பேட்டை: மாசி மகத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை முழுக்குத்துறை உப்பனாற்றில் 100க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு  தீர்த்தவாரி நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கடற்கரை மற்றும் கிள்ளை முழுக்குத்துறை உப்பனாற்றில் நேற்று நடந்த மாசிமக திரு விழாவில் பின்னத்துõர் பெருமாள், தில்லைவிடங்கன் விடேங்கேஸ்வரர், எடப்பாளையம், மடுவங்கரை, கொடிப்பள்ளம், தைக்கால், வல்லம்,  ஆதிவராகநல்லூர், குத்தாப்பாளையம், அண்ணாமலை நகர், பூவாலை, பு.முட்லூர் உட்பட 100க்கும் மேற்பட்ட  சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு  டிராக்டர் மூலம் கொண்டு வந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். புதுப்பேட்டையில் மாசி மகத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !