உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

தியாகதுருகம்: புக்குளம் கிராமத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த புக்குளம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கங்கையம்மன், விநாயகர், பாலமுருகன் சன்னதி உள்ளது. இக்கோவிலை புதுப்பிக்க பக்தர்கள் முடிவு செய்து நிதி திரட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி துவங்கியது. மூலவர் விமானம், முன்மண்டபம், சுவாமி சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. சுற்றுச் சுவர் புணரமைத்து சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டது. கோவில் செப்பனிடும் பணிகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா நாளை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கவுள்ளது. வரும் 8ம் தேதி காலை 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !