உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மாசி மகம் விழா கோலாகலம்!

தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மாசி மகம் விழா கோலாகலம்!

திண்டுக்கல்: சப்த ரிஷிகளில் ஒருவரான ஸ்ரீபரத்வாஜருக்கு திண்டுக்கல் அருகே உள்ள தவசிமேடை ஒடுக்கத்தில் ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதியில் மகாலிங்கேஸ்வரரும், மாணிக்கவள்ளி, மரகதவள்ளியும் அருள்பாலிக்கின்றனர். 27 நட்சத்திரத்தில் மகம் நட்சத்திரத்திற்குரிய தலமான இங்கு மாசிமகம் தினமான நேற்று (4ம் தேதி) காலை 9.00 மணிமுதல் மாசி மகத்திற்குரிய சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மகாலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !