உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமதேவர் சித்தர் 7ம் ஆண்டு குருபூஜை விழா!

ராமதேவர் சித்தர் 7ம் ஆண்டு குருபூஜை விழா!

மதுரை: 18 சித்தர்களில் ஒருவரான பகவான் ராமதேவர் சித்தருக்கு, மதுரை அருகே உள்ள அழகர் கோவில் அழகர்மலையில் அமைந்துள்ள ராமதேவர் சித்தர் ஜீவ சமாதி பீடத்தில் இன்று (5ம் தேதி) பூரம் நட்சத்திரத்தில் காலை 10.30 மணிக்கு குருபூஜை நடைபெற்றது.

இந்த குருபூஜையை மதுரை, பகவான் ராமதேவர் சித்தர் அறக்கட்டளையும், மாங்குளம் பகுதி மக்களும் சேர்ந்து நடத்தினர். முன்னதாக கும்பமுனி அகஸ்தியர் சீடர் ஸ்ரீலஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகள் தலைமையில் நேற்று (புதன் கிழமை) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று மதியம் 12.00 மணி க்கு அழகர் கோவில் மாங்குளம் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

தொடர்புக்கு: பகவான் ஸ்ரீராமதேவர் சித்தர் அறக்கட்டளை
பதிவு எண்: 539/09 212, நாயக்கர் புதுத் தெரு. மதுரை-1.
99947 93888, 88839 83605, 95858 52305


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !