சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்!
சேலம்: சேலம், நெத்திமேடு சமயபுரம் மாரியம்மன், முனியப்பன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளாக பக்தர்கள்,அம்மனை தரிசனம் செய்தனர். சேலம், நெத்திமேடு முனியப்பன், சமயபுரம் மாரியம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை ஹோம பூஜைகள் துவங்கின. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசம், தேவதா அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி, சுதர்ஸன, நவக்ரஹ ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து கோபூஜை, புனித தீர்த்தங்கள், முளை பாழிகை, கோபுர கலசம், புதிய சிலைகள், விக்ரஹகங்கள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில், திரளாக பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.மாலையில், வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, ம்ருத்சங்க்ஹரணம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், த்வார பூஜை, வேதி கார்ச்சனை, முதற் கால யாக வேள்வி ஆகியன நடந்தது.நேற்று காலை, இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், தத்வார்ச்சனை ஸ்பர்ஷாஹூதி, ஷண்ணவதி ஹோமம், கனிவர்க்க ஹோமம், இரண்டாம் கால மஹாபூர்ணாஹூதி ஆகியன நடந்தது.தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் விமான கோபுர கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்களான முனியப்பன், சமயபுரம் மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.மஹா அபிஷேகம், அலங்காரம், தசதரிசனம், தசதானம், மஹாதீபாராதனை செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளாக பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.