ராமேஸ்வரத்தில் திருவாசக பஜனை!
ADDED :3972 days ago
ராமேஸ்வரம் : திருக்குழுக்குன்றம் சதாசிவ பரம பிரம்ம சிவனடியார் திருக்கூடம் சார்பில், ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் திருவாசக பஜனை நடந்தது. தாமோதரன் சிவனடியார் தலைமையிலான பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடினர். தொடர்ந்து 10 மணி நேரம் நடந்த பஜனையில் சென்னை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லையில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேலான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் செய்திருந்தார்.