மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!
ADDED :3867 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரெட்டியாரூர் மாகாளியம்மன் கோவிலில், 27ம் ஆண்டு குண்டம் திருவிழா நடந்தது. விழா கடந்த மாதம் 26ம் தேதி இரவு 8:00 மணிக்கு நந்தா தீபமும், கடந்த 3ம் தேதி காலை 11:00 மணிக்கு விழாத்தொடக்கம், தீர்த்தம் அழைத்தல், கும்பஸ்தாபனம், சக்தி அழைத்தல் உள்ளிட்ட பூஜைகளும், 4ம் தேதி மாவிளக்கு பூஜை, அம்மன் திருக்கல்யாணம், தேர் உலா, குண்டம், புண்யாகவாசனம் ஆகியவை நடந்தன. கடந்த, 5ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தொடர்ந்து, குதிரை வாகன சேவை, பவுர்ணமி பூஜை, கும்பம் கங்கை சேர்த்தல், கிராம சாந்தி பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து நேற்று, காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீர், இரவு 8:00 மணிக்கு மகா அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.