உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் திவ்ய பெருமாள் தரிசனம்!

வேலூர் திவ்ய பெருமாள் தரிசனம்!

வேலூர்:வேலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சாய் சிட்டி சென்டரில், 108 திவ்ய தேச பெருமாள் தரிசன கண்காட்சி திறப்பு விழா, நேற்று நடந்தது.

சக்தி அம்மா குத்து விளக்கேற்றி, பெருமாளுக்கு பூஜை செய்து திறந்து வைத்தார். இது குறித்து அமைப்பாளர்கள் ஆட்வெல் குமார், மோகன், பிரசாத் ஆகியோர் கூறியதாவது:இதற்கு முன் மதுரை, கோவை, சென்னையில், 108 திவ்ய தேச பெருமாள் தரிசன கண்காட்சி நடந்தது. தற்போது, வேலூரில் நடக்கிறது. ரங்கநாதர் முதல் திருவேங்கவுடையான் வரை, 108 இடத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளின் தரிசனத்தை, ஒரே இடத்தில் பார்க்கலாம். கண்காட்சி, 16 நாட்கள் நடக்கிறது. காலை, 7 மணி முதல் இரவு, 9 வரை, கண்காட்சி நடக்கும்.இவ்வாறு கூறினர்.தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ் பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத், சாய் சிட்டி உரிமையாளர்கள் ராமமூர்த்தி, ஜெய பிரகாஷ், இளங்கோவன், ஜெய் ஸ்ரீராம், சக்தி வேலன் மற்றும் சிருஷ்டி பள்ளி தாளாளர் ராஜேந்திரன், முன்னாள் மேயர் கார்த்திகேயன், அப்பாட்சி ஸ்வாளிகள், காசி ஸ்வாமிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !