உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்!

அம்மன் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்!

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே உள்ள, இரண்டு அம்மன் கோவில்களில், நாளை, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், வள்ளலார் நகர், கம்பர் தெருவில், புதிதாக கட்டப்பட்டுள்ள குப்பாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை இன்று துவங்குகிறது. வள்ளலார் நகரில், கம்பர் தெருவில் கட்டப் பட்டு வரும் குப்பாத்தம்மன் கோவில் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நாளை காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை இன்று துவங்குகிறது. இதே போல், பொதட்டூர்பேட்டை இ.எஸ்.டி., நகர் மேற்கு பகுதியில் உள்ள, எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை, காலை 9:00 மணிக்கு நடக்கிறது. மாலையில், அம்மன் வீதி உலா மற்றும் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !