பெருமாள் கோவிலில் சுவாதி திருமஞ்சனம்!
ADDED :3863 days ago
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், நேற்று, சுவாதி திருமஞ்சனம் நடந்தது. பேரம்பாக்கம் அடுத்துள்ள, நரசிங்கபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், மாதந்தோறும், பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி யன்று, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 10:00 மணி முதல், 11:30 மணி வரை, மூலவர் நரசிம்ம பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து யாக பூஜையும், சிறப்பு அபிஷேக மும் நடந்தது. பின் மாலை 4:30 மணிக்கு, பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோவிலில் உலா வந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.