சுப்பையா நகரில் மயானக்கொள்ளை!
ADDED :3921 days ago
புதுச்சேரி:சுப்பையா நகர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு
மயானக் கொள்ளை விழா வரும் 20ம் தேதி நடக்கிறது.தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், நான்காம் ஆண்டு மயானக் கொள்ளை விழா, வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வரும் 19ம் தேதி குங்கும அபிஷேகம், திருவிளக்கு பூஜை, ரணகளிப்பு வல்லாளங்கோட்டை அழித்தலும், அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. 20ம் தேதி திருத்தேர், மயானக் கொள்ளை உற்சவம், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.