சொர்ணபுரீஸ்வரர் கோவில் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம்!
ADDED :3870 days ago
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த எய்யலூர் மங்களாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 4:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. 5:00 மணிக்கு பூர்ணாகுதி, மகா தீபாராதனையும், 5:30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும், 6:30 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜையும், 7:00 மணிக்கு மகா தீபாராதனையைத் தொடர்ந்து 4ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு சூரிய பகவான், சந்திர பகவான், சனி பகவான், பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மங்களாம்பிகை சமதே சொர்ணபுரீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.