வத்திராயிருப்பு கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை!
ADDED :3965 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதி கோயில்களில் நேற்று தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. சேனியர்குடி சங்கிலிமாடன், மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நடந்த அஷ்டமி பூஜையை யொட்டி காலபைரவருக்கு 18 வகை அபிஷேகம், அர்ச்சனை வழிபாடு நடந்தது. விபூதிக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு பெண்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
* மூவரைவென்றான் மரகதவல்லி சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் பக்தர்களின் பஜனை வழிபாட்டுடன் தோஷ நிவர்த்தி அர்ச்சனை நடந்தது.
* வத்திராயிருப்பு விசாலாட்சி உடணுறை காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜை வழிபாட்டில் பெண்களின் பஜனை வழிபாடு , ஆயிரத்தெட்டு அர்ச்சனை பூஜை, 18 வகை அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.