உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சற்குரு சீமான் சுவாமிகளின் 125ஆம் ஆண்டு குருபூஜை விழா!

சற்குரு சீமான் சுவாமிகளின் 125ஆம் ஆண்டு குருபூஜை விழா!

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ சற்குரு சீமான் சுவாமிகளின் 125ஆம் ஆண்டு குருபூஜைப் பெருவிழா நடந்தது. காரைக்கால் கோவில்பத்து பாரதியார் சாலையில் உள்ள ஸ்ரீசற்குரு சீமான் சுவாமிகளின்  125ம் ஆண்டு குருபூஜைக் பெருவிழாவில் நேற்று காலை 11 மணிக்கு சற்குரு சீமான் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் பக்தர்ளுக்கு வழங்கப்பட்டது. மாலை சற்குரு சீமான் சுவாமிகளின் திருவருளை நினைவுப்படுத்தும் ஆன்மிக சொற்பொறிவு சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சுற்குரு சீமான் சுவாமிகள் மடாலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சற்குரு சீமான் சுவாமிகளை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !