உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் ரத்து!

திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் ரத்து!

திருப்பதி: திருமலையில், இன்று ஐந்து மணி நேரம் தரிசனம், ரத்து செய்யப்பட்டு உள்ளது.திருமலையில், வரும் 21ம் தேதி, உகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகையை முன்னிட்டு, ஏழுமலையான் கோவிலில், ஆஸ்தானம் நடைபெற உள்ளது.அதற்காக, இன்று கோவில் முழுவதும் சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதற்காக, இன்று காலை 6:00 மணி முதல், 11:00 மணி வரை, தரிசனம் ரத்து செய்யபட்டு உள்ளது. மேலும், அஷ்டதளபாத பத்மாராதனை சேவை ரத்து செய்யபட்டுள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !