உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைரமுடி கருட சேவை!

வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைரமுடி கருட சேவை!

விழுப்புரம்: ஏகாதசியை ஒட்டி விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைரமுடி கருட சேவை அலங்காரம் நடந்தது. விழுப்புரம்  வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு சிறப்பு உற்சவ பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு  அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மயிலாப்பூர் மேலக்கொட்டை பகுதியில் அமைந்துள்ள கோவிலில் பெருமாள் வீற்றிருப்பது  போல், பெருமாள் மாலை 6:00 மணிக்கு வைரமுடி கருட சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ஸ்ரீமத் ராமானுஜர்  வைஷ்ணவ சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !