வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!
ADDED :3854 days ago
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த, துர்க்கை அம்மன் பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள துர்க்கை அம்மன் கோவிலில், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்று மாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகபூஜையும், பின் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.