ஜெனகைநாராயணப்பெருமாள் கோவிலில் மார்ச் 21ல் பிரம்மோற்ஸவம்!
ADDED :3855 days ago
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகைநாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா மார்ச் 21ல் துவங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றம், 27ல் திருக்கல்யாணம், 28ல் ராமஜெனனம், 30ல் புஷ்ப யாகம் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா வருகிறார். ஏற்பாடுகளை தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர் பூபதி செய்துள்ளனர்.