உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாந்தநாத ஸ்வாமி கோவில் ஆனிப் பெருந்திருவிழா ஜூலை 13ல் தேதி துவக்கம்

சாந்தநாத ஸ்வாமி கோவில் ஆனிப் பெருந்திருவிழா ஜூலை 13ல் தேதி துவக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில் ஆனிப் பெருந்திருவிழா ஜூலை மூன்றாம் தேதி ஆரம்பமாகிறது. 13ம் தேதி முடிய பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா மூன்றாம் தேதி காலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள், அம்பாள் சமேதராக சுவாமி வீதியுலா வருதல், சமய சொற்பொழிவு, அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ம் தேதி காலை 10 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. 12ம் தேதி பகல் 12.30 மணிக்கு தீர்த்தாவாரியும், 13ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !