இலவச சைவ சமய பயிற்சி வகுப்பு!
ADDED :3960 days ago
திருவண்ணாமலை: வந்தவாசி சைவ சமயப் பேரவை நடத்தும், ஒரு வார இலவச பயிற்சி வகுப்பு, மே 1ம் தேதி நடக்கவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தென்னாங்கூர் ஜி.ஏ.அறக்கட்டளை ஸ்ரீஞானானந்தகிரி பீடத்தில், 12ம் ஆண்டு, இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு, மே 1 முதல், 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி பெற விரும்புவோர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, பணி, கலந்து கொள்வதன் நோக்கம், இதற்கு முன் பெற்ற பயிற்சி வகுப்பு விவரம் மற்றும் முழு முகவரியுடன், ஏப்., 10ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். அ.வே.முனுசாமி, சைவ சமயப் பேரவை அமைப்பாளர், 37/7பி, அகத்தியர் தெரு, கேசவ நகர், வந்தவாசி-604 408, திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்பலாம் அல்லது 94861-73190 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.