உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் உண்டியல்

கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் உண்டியல்

சிதம்பரம் : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன்கோவில் அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டது. சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்களை நீக்கிவிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தக்கார் நியமிக்கப்பட்டு கடந்த மார்ச் 9ம் தேதி முதல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் தக்காராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கோவிலில் இருந்த உண்டியல் கடந்த மாதம் 19ம் தேதி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் முதல் முறையாக கோவிலில் நேற்று முன்தினம் செயல் அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் உண்டியல் அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !