உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தக்ஷிண காளி ஸஹஸ்ர நாமாவளீ

தக்ஷிண காளி ஸஹஸ்ர நாமாவளீ

தக்ஷிண காளிகா தேவியினுடைய ஸஹஸ்ர நாமாவளி மிகவும் விக்ஷேஷமானது. திரிபுரஸூந்தரிக்கு மஹாகாளரால் கூறப்பட்டது. சுந்தரியானவள், மாயாதீதமாகவும், காலாதீதாமகவும் இருக்கக் கூடியதான காளியினுடைய ரூபத்தைப் பற்றி கேட்கின்ற பொழுது, அவளுடைய ஸ்தோத்திர நாமாக்களையும் கூறியருளும் படி வேண்டினாள். எல்லாமே அவளாக இருக்கும் அந்த தேவிக்கு இது தெரியாதா என்று பலர் கேட்கலாம். மற்றவர்கள் வாயால் தன் புகழ்ச்சியைக் கேட்கும் போது யாருக்குமே ஒரு சந்தோஷந்தானே. அதுவும் பெண் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அந்த மாதிரி சுந்தரி கேட்டபொழுது மஹா காளரால் கூறப்பட்டது தான் இந்த காளி ஸஹஸ்ர நாமாவளி.

மஹா காள ஸம்ஹிதையில், குஹ்யகாளி காண்டம் மூன்றாம் பாகத்தில் இது அமைந்துள்ளது.

த்யானம்

சவாரூடாம் மஹா பீமாம் கோர தம்ஷ்ட்ராம் ஹஸன் முகீம்
சதுர்புஜாம் கட்கமுண்ட வராபய கராம் சிவாம்
முண்டமால தராம் தேவீம் லலஜ் ஜிஹ்வாம் திகம்பராம்
ஏவம் ஸம் சிந்தயேத் காளீம் ச்மசானாலய வாஸினீம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !