உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலபரமேஸ்வரி கோயிலில் பூச்சொரிதல் விழா!

முத்தாலபரமேஸ்வரி கோயிலில் பூச்சொரிதல் விழா!

பரமக்குடி:  பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில், பங்குனி விழாவின் முன்னோட்டமாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதனையொட்டி நகரில் பஸ் ஸ்டாண்ட், ஆர்ச், பெரிய பஜார், ஆற்றுப்பாலம், ஐந்துமுனை ரோடு உள்ளிட்ட இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் பூத்தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து அனைத்து இடங்களில் இருந்தும் பூத்தட்டுகள் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்தது. பின்னர் அதிகாலை மூலவர் முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மார்ச் 27 ல் பங்குனி விழா கொடியேற்றமும், ஏப்., 4 ல் மின்சாரதீபதேரோட்டம், ஏப்., 6 ல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தவுள்ளனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !