ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்!
ADDED :3964 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் பங்குனி மாத 11 நாட்கள் பிரம்மோத்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் காலை யாகசாலை அரங்கில் வரதராஜபண்டிட் சீனிவாசராகவன் வேதம் ஓத, வெள்ளிசப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவியர் பெருமாள் சுவாமிக்கு தீபாராதனை பூஜை நடந்தது. பின்னர் அனுமன் படமுள்ள கொடி ஊர்வலமாக கோயில் வர, அங்கு ரகுராமர் பட்டர் வேதம் முழங்க கோயில் கம்பத்தில் கொடியேற்ற விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமிக்கு பூஜை செய்து அருள்பெற்றனர். மாலை அன்னவாகனத்தில் சுவாமி ரதவீதியில் எழுந்தருளினார். கோயில் தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.